அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
ஸ்தல வரலாறு :
ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க திருவான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும் என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ணநாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும் அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்துள்ளார். வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டுள்ளார். அகத்திய முனிவருக்காக ஒரு முறையும் வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.
கோயில் சிறப்புகள் :
§
இத்தலத்தில் இறைவன் தீண்டாத் திருமேனியாய் மேற்கு
நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
§
கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி திருந்தி தனது
பாவங்கள் போக இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை அவர் சிவனை தரிசிக்க
வந்தபோது அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை
அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட சுவாமியின்
தலையிலும் மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது. தன்னை வணங்கி திருந்திய
வால்மீகிக்கு சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். வால்மீகி இறைவனை
தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார். அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு
கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின்
ஜீவசமாதியில் இருக்கிறது.
§ அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் “மருந்தீஸ்வரர்’ எனப்படுகிறார். உயிரினங்களுக்கு ஏற்படும் 4448 வகை நோய்களின் தன்மைகள், அவற்றைப் போக்கும் மூலிகைகளின் வகைகள் மற்றும் அவற்றை உபயோகிக்கும் முறைகளைப் பற்றி அகத்திய முனிவருக்கு இறைவன் உபதேசித்ததால் இத்தலத்து இறைவனுக்கு ‘மருந்தீசர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
§
அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்களுக்கு, முசுகுந்த சக்கரவர்த்தி உதவி செய்ததால் இந்திரனிடம்
இருந்து பத்து தியாகராஜர் திருவுருவங்களைப் பெற்றார். அவற்றில் ஏழு
திருவுருவங்களைத் திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் நிறுவினார். அவை ‘சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று திருவுருவங்களை தொண்டை நாட்டிலுள்ள
திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.
இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியாகராஜரை ‘ஆடும் தியாகர்’ என்று அழைப்பர். இவர்தான்
வன்னி மரத்தடியில் வான்மீக முனிவருக்கு நடனக் காட்சி தந்தருளியவர். இன்றும் விசேஷ
நாட்களிலும், திருவிழாவின் முக்கிய
நாளிலும் தியாகராஜப் பெருமானின் பதினெட்டு நடனக் காட்சி நிகழ்கிறது.
பஞ்சபாண்டவர் சிவன் கோவில்: மகாபாரத காலத்துடன் தொடர்புடையதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது.புராண நம்பிக்கையின்படி,மகாபாரதத்தில் வரும் தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகதேவன் ஆகிய பஞ்ச பாண்டவர்கள், தங்களின் வனவாச காலத்தில் இந்த பகுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் பகவான் சிவனை மனமார வழிபட இந்த சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்ததாக நம்பப்படுகிறது.அதனால் இந்த தலத்திற்கு“பஞ்சபாண்டவர் சிவன் கோவில்” என்ற பெயர் ஏற்பட்டது.இந்த கோவில் மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும்,வாழ்க்கையில் வரும் தடைகள் நீங்க,குடும்ப ஒற்றுமை கிடைக்க பக்தர்கள் அதிகமாக இங்கு வந்து வழிபடுகிறார்கள்.குறிப்பாக பிரதோஷம், சிவராத்திரி, திங்கட்கிழமை போன்ற நாட்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எளிய அமைப்பு கொண்ட இந்த கோவில், அமைதியான சூழலில் சிவபெருமானை தரிசிக்க உதவும் ஒரு சிறந்த தலமாக உள்ளது
2. பாம்பன் சுவாமிகள் கோவில்
சிவராத்திரி நாளில் இந்த கோவிலுக்கு ஒரு தனி ஆன்மீக மகத்துவம் உள்ளது.சிவராத்திரி ஏன் முக்கியம்?பாம்பன் சுவாமிகள்,சிவனையும்,முருகனையும் ஒரே பரம்பொருளின் இருவடிவங்களாக கண்ட ஞானி.அதனால் சிவராத்திரி நாளில்,சிவ தத்துவம் + முருக பக்தி + சித்தர் அருள்மூன்றும் இணையும் சிறப்பு இந்த கோவிலில் அனுபவிக்கலாம்.சிவராத்திரி நாளில் பாம்பன் சுவாமிகள் கோவிலில் வழிபட்டால்:மன குழப்பம் நீங்கும்,வாழ்க்கை தடைகள் குறையும்,ஆன்மீக தெளிவு கிடைக்கும்,நோய், பயம், தீய எண்ணங்கள் விலகும்.
3. அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் – மயிலாப்பூர்
பார்வதி தேவி மயிலாக (மயில் வடிவில்) வந்து சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால்,புராணக் கதையின்படி, பார்வதி தேவி மயிலாக (மயில் வடிவில்) வந்து சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால்,இந்த இடத்திற்கு “மயிலாப்பூர்” என்ற பெயர் வந்தது. அம்மன் இங்கு கற்பகாம்பாள் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.கோவிலின் சிறப்புகள்: உயரமான, அழகான கோபுரம்,திராவிட பாணி சிற்பங்கள்,சக்தி நிறைந்த சிவலிங்கம்,குடும்ப நலம், திருமண தடை நீக்கம், கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகிய வேண்டுதல்களுக்கு பிரசித்தி
*உள்ளடக்க ஆதாரம் & பொறுப்புத் துறப்பு:*
இந்த உள்ளடக்கம் Google தேடுபொறியில்
கிடைக்கும் பொது மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு
தயாரிக்கப்பட்ட தகவல்கள்.இந்த கோவில் பேக்கேஜில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன
நேரங்கள், பூஜை ஏற்பாடுகள் மற்றும் பயண திட்டங்கள்
ஆகியவை கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகள், வானிலை மாற்றங்கள், போக்குவரத்து நிலைமை
மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் பெறக்கூடும். குறிப்பாக
தெளிவாக குறிப்பிடப்படாதவரை, குறிப்பிட்ட தரிசன
நேரம் அல்லது சிறப்பு அனுமதி (VIP / Special Entry) உத்தரவாதமாக
வழங்கப்படாது. கோவில் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள், திடீர்
கட்டுப்பாடுகள் அல்லது நிர்வாகத் தீர்மானங்களால் ஏற்படும் மாற்றங்களுக்கு எங்களால்
எந்தவித பொறுப்பையும் ஏற்க இயலாது. கிடைக்கப்பெறும்
வளங்களை பயன்படுத்தி, எங்களால் இயன்ற சிறந்த
முயற்சியின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள்
தங்களுக்கேற்றபடி சரிபார்த்து திட்டமிடலாம்.
நன்றி!