Maasi Therthiruvizha-Thiruchendur

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்ச் 4ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்ச் 4ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவிழாவின் முதல் நாளான பிப்ரவரி 21 அன்று அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெறுகிறது தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

வெள்ளி யானை வாகனம், சிங்க கேடயம், சந்திர பிறை, எந்திர விமானம் உள்ளிட்ட அலங்கார வாகனங்களில் சுவாமியின் காட்சியளிப்பு பக்தர்களை பரவசப்படுத்தும் வகையில் அமையும். மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பச்சை சாத்தி, வெள்ளை சாத்தி சிவப்பு சாத்தி அலங்காரங்கள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக பிப்ரவரி 28 அன்று நடைபெறும் பச்சை சாத்தி அலங்காரம் பக்தர்கள் அதிக அளவில் கூடும் சிறப்பு நாளாக கருதப்படுகிறது அன்றைய தினம் சுவாமி பச்சை நிற அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பச்சை சாத்தி அலங்காரத்தின் முக்கிய நன்மைகள்:


·        செல்வ வளம் மற்றும் வளர்ச்சி: பச்சை நிறம் செழிப்பின் அடையாளம். இக்கோலத்தில் முருகனைத் தரிசித்தால் செல்வம் பெருகும், தொழில் மற்றும் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.

·         விஷ்ணு அம்சம்: பச்சை சாத்தி அலங்காரம் மகாவிஷ்ணுவின் அம்சமாக, உலக உயிர்களைக் காக்கும் (ரட்சிக்கக்கூடிய) சக்தியுடன் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

·         பகை மற்றும் பிணி நீங்குதல்: இந்த சிறப்பான அலங்காரத்தில் முருகனை வணங்கினால், எதிரிகளின் தொல்லை (அடுபகை) மற்றும் தீராத நோய்கள் (பிணி) நீங்கும்.

·         மன அமைதி: இயற்கையின் வண்ணமாகிய பச்சையில் முருகனைத் தரிசிப்பது மனதிற்கு நிம்மதியையும், நேர்மறை ஆற்றலையும் (Positive Energy) வழங்குகிறது.  திருவிழாவின் உச்ச நிகழ்வான மார்ச் 2 தேதி மாசி மகம் தினத்தன்று பிரசித்தி பெற்று பெற்ற திருத்தேர் விழா நடைபெற உள்ளது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் இந்த நிகழ்வு திருச்செந்தூர் மாசி திருவிழாவின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

தொடர்ந்து மார்ச் 3 தேதி இரவு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. மார்ச் 4 தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் மாசி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குடிநீர் வசதி மருத்துவ முகாம் போக்குவரத்து சீர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் இந்த மாசி திருவிழாவில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற வேண்டுகிறோம். 


                                                                     *உள்ளடக்க ஆதாரம் & பொறுப்புத் துறப்பு:*

இந்த உள்ளடக்கம் Google தேடுபொறியில் கிடைக்கும் பொது மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தகவல்கள். இந்த கோவில் பேக்கேஜில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரங்கள், பூஜை ஏற்பாடுகள் மற்றும் பயண திட்டங்கள் ஆகியவை கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகள், வானிலை மாற்றங்கள், போக்குவரத்து நிலைமை மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் பெறக்கூடும். குறிப்பாக தெளிவாக குறிப்பிடப்படாதவரை, குறிப்பிட்ட தரிசன நேரம் அல்லது சிறப்பு அனுமதி (VIP / Special Entry) உத்தரவாதமாக வழங்கப்படாது. கோவில் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள், திடீர் கட்டுப்பாடுகள் அல்லது நிர்வாகத் தீர்மானங்களால் ஏற்படும் மாற்றங்களுக்கு எங்களால் எந்தவித பொறுப்பையும் ஏற்க இயலாது. கிடைக்கப்பெறும் வளங்களை பயன்படுத்தி, எங்களால் இயன்ற சிறந்த முயற்சியின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்களுக்கேற்றபடி சரிபார்த்து திட்டமிடலாம்.

நன்றி!



· 

Are You Looking To Join us ?

Partners are welcome to take care of business development